செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4290 days ago
நாமக்கல்: மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, புன்னிய யாகம், பூர்ணாஹுதி, நான்காம் கால யாக பூஜை, 5 மணிக்கு மேல் பிடாரி செல்லாண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.