உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

கொத்துக்காடு:  விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொத்துக்காடு ஸ்ரீ விஜய விநாயகர் மற்றும் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புதன்கிழமை காலை விஜய விநாயகர், மாரியம்மன், துர்க்கை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகமும், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !