உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் இன்று தெப்ப உற்சவம்

திருக்கோஷ்டியூரில் இன்று தெப்ப உற்சவம்

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மாசித் தெப்ப உற்சவம் பிப்.5ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை பெருமாள்  வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் திருக்கோலத்தில் தெப்ப மண்டபம் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து பகல் 11 மணிக்கு தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பகல் 12.50 முதல் 1.20 மணிக்குள் பகல் தெப்பமாக ஒருசுற்று தெப்பம் நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு பெருமாள் தேவியருடன் திருக்குளத்தை மும்முறை சுற்றி தெப்பம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !