உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்!

முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியிலுள்ள முனியாண்டி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இக்கோயிலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. அப்பகுதி மக்கள் சார்பில், திருப்பணிகள் நடைபெற்று புதன்கிழமை காலை விக்னேஷ்வர் பூஜை மற்றும் கோபூஜை, தானபூஜைகளும், மாலை முதல்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டன. நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் காலை 9 மணிக்குமஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !