சங்கராபரணி ஆற்றங்கரையில்மாசி மகத் தீர்த்தவாரி
ADDED :4358 days ago
திருக்கனுார்: குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மகத் தீர்த்தவாரி நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் அருகில், சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மகம் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில், குமாரப்பாளையம் தண்டு மாரியம்மன், புதுக்குப்பம் முத்து மாரியம்மன் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து சுவாமிகள் பங்கேற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.