உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோவிலில் 3,000 பேருக்கு அன்னதானம்!

தஞ்சாவூர் பெரியகோவிலில் 3,000 பேருக்கு அன்னதானம்!

 தஞ்சாவூர்: தஞ்சையில், பெரியகோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் 3,000 பேருக்கு ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இணைந்து, நேற்று அன்னதானம் வழங்கினர். தஞ்சை பெரியகோவில் முதல் நுழைவாயிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில், ஸ்ரீ அகஸ்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை, அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை நகர கிளை ஆகியவை சார்பில் தொழிலாளர்கள் இணைந்து, நன்கொடை வசூலித்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன்படி, பெரியகோவிலில் நேற்றும் பவுர்ணமி தினத்தையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பட்டுக்கோட்டை தன லோகநாதன் துவக்கி வைத்தார். தஞ்சை நகர அரசு போக்குவரத்துக்கழக கிளை தொழிலாளர்கள் தமிழரசு, பரமசிவம், ஜெயபாலன் மற்றும் ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மூவாயிரம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளையினர், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் செய்திருந்தனர். அன்னதான அறக்கட்டளையினர் கூறுகையில், ""தஞ்சை பெரியகோவிலில், மாதம்தோறும் ஏழை, எளியோருக்கு பவுணர்மி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, தனிப்பட்ட முறையில் யாரிடமும் பெரிய தொகையை பெறாமல், பொதுமக்கள், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினர் தாங்களாக முன்வந்து அளிக்கும் சிறு, சிறு தொகையை கொண்டு நடத்தப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !