ஷீரடி ஆனந்த சாய்பாபாகோவிலில் சிறப்பு வழிபாடு
உடுமலை: உடுமலை, தில்லை நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில், சிவனேசன் சுவாமிகளின் புண்யதிதியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே, நாயக்கன்பாளையத்தை பூர்வீகமாகக்கொண்டவர் சிவனேசன் சுவாமிகள். இவர் ஷீரடி பாபாவின் துவாரகா மாயியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி, சாய் பக்தி பிரசங்கங்கள், உபதேசங்கள் செய்து வந்தார். சாய் சேவையில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த 1996ல், ஷீரடி அருகில் உள்ள பிம்பிள்வாடி என்ற இடத்தில் சமாதி அடைந்தார். இவரது நினைவாக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஷீரடி செல்லும் பெரும்பாலான பக்தர்கள், சிவனேசன் சுவாமியின் சமாதிக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர். இவருக்கு உடுமலையில் உள்ள ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில், புண்யதிதி நடந்தது. சிறப்பு ஆராதனை, பூஜை, பஜனை நடந்தன. மாலை 6.00 மணிக்கு, இவரது உருவப்படம் பாபா பல்லக்கில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது; ஏராளமானபக்தர்கள் பங்கேற்று, சாய் பக்தி பஜன்கள் பாடினர்.