உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம்

முத்துமாரியம்மன் கோவிலில் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம்

ஊட்டி : ஊட்டி கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வாஞ்சாகல்ப மகா கணபதி ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்த புரம் பகுதியில் உள்ள கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வாஞ்சாகல்ப கணபதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனையொட்டி, 14ம் தேதி பவுர்ணமியன்று, காலை 6:00 மணிக்கு மூலிகை எண்ணெய் சார்த்தி சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை சவுந்தர்ய லஹரி பூஜை, பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. 15ம் தேதி காலை 6:00 மணிக்கு அபிஷேக வழிபாடு, 9:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, வழிபாடு, பஞ்ச பூதங்களில் மண், விதைகளுக்கு வழிபாடு ஆகியவை நடந்தது. நேற்று காலை 10:00 மணி முதல், இயற்கை வளங்கள் மேம்படவும், உலக நன்மைக்காகவும் வாஞ்சாகல்ப மகா கணபதி ஹோமம், மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை மானஸ் நிர்வாகிகள், கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !