உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜா கோயிலில் 66 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

நாகராஜா கோயிலில் 66 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

நாகர்கோவில் : முதலமைச்சர் ஜெ., பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் குமரி மாவட்ட மாணவரணி சார்பில் 66 அகல் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். அமைச்சர் பச்சைமால் அகல்விளக்கை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், முருகேசன் எம்.எல்.ஏ.,உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் டதி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1605 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !