பாலமுருகன் கோயில் காவடி கட்டு திருவிழா
ADDED :4285 days ago
நாகர்கோவில் : தெங்கம்புதூர் அருகே உள்ள புதுக்குடியிருப்பு பாலமுருகன் கோயில் மாசிமக காவடி கட்டு திருவிழா தொடங்கியது. முதல் நாளில் தீபாராதனை, சமய சொற்பொழிவு, திருவிளக்குபூஜை, பச்சைசாத்து தீபாராதனை, மயில்வாகனத்தில் சுவாமி பவனி ஆகியவை நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் தெங்கம்புதூர் மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோயிலில் வேல்தரித்தல் நிகழ்ச்சியும், புஷ்பகாவடி, பழக்காவடி உள்ளிட்ட காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பாலமுருகனுக்கு அபிஷேகம் தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இரவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.