உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆச்சார்ய உற்சவம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆச்சார்ய உற்சவம்!

திருச்செந்தூர்: சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு காப்புகட்டிய சிவாச்சாரியாருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூரில் மாசித்திருவிழா பிப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நேற்று காலை காப்பு கட்டிய சிவாச்சாரியார் மீனாட்சி சுந்தர பட்டருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் ஆச்சார்ய உற்சவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !