நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம்
ADDED :4284 days ago
நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வடமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து, 1008 லிட்டர் பால், 500 லிட்டர் தயிர், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.