காஞ்சி காமாட்சியம்மன் விஸ்வரூப தரிசனம்!
ADDED :4285 days ago
காஞ்சி: காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான காமாட்சி அம்மனின் விஸ்வரூப தரிசனம் இன்று நடைபெற்றது. பிப். 6ல் தொடங்கி 12 நாள் நடைபெறும் பிரமோற்சவத்தில் கடந்த 8ம் தேதி காமாட்சியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக அன்னையின் விஸ்வரூப தரிசன உற்சவம் இன்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.