சிதிலமடைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால கோவில்!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், ஏனங்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ விஷ்ணு தலமான ஸ்ரீமகிழம்பாள் சமேத திருவளந் துறையார், ஸ்ரீவராக பெருமாள் கோவில் சிதிலமடைந்ததை அப்பகுதியினர் புதுப்பித்து வருகி ன்றனர். பக்தர்களின் நன் கொடையை எதிர்பார்த்துள்ளனர். முன்னொரு சமயம் நாரதரும், மகா விஷ்னுவும் திரிபுரங்களில் சென்று புருஷர்களுக்கு வேத மார்க்கங்களை நம்பவேண்டாம் என்று போதித்து சிவ பூஜையில் நம்பிக்கை இழக்கும்படி செய்து ஸ்தீரிகளை பதிவிரதா தர்மம் குறையும் படி செய்தனர். அதைக்கண்ட பிருகு மகரிஷி இருவருக்கும் சாபம் கொடுத்தார். மகாவிஷ் ணுவுக்கு பலவிதமான குத்சிதயோனி ஜென்மங்கள் அனேகம் எடுக்கும் படியும், புத்திரபாக்கியம் இல்லாமல் போகட்டும் என்று சாபம் விட்டவர், நாரதரை பார்த்து இந்த பாவத்திற்கு துணை போனதால் என்றும் பிரம்மச்சாரியாய் இருப்பாய் என்று சாபம் இட்டார்.
இருவரும் திடுக்கிட்டு ஈசனை நோக்கி தங்களை காக்க வேண்டும் என்று பாதம் பணிந்தனர். அதற்கு விமோசனமாக பூலோகத்தில் ஏனங்குடி என்ற இட த்தில் மகிழம்பூ கொண்டு புத்ரகாமேஸ்டி யாகம்செய்து அம்பாள் அருள் பெற மன்மதன் மானசீக புத்திரனாக கிடைப்பான் என கூறினார். அதன் விளைவாக நாகை மாவட்டம், சன்னாநல்லூர் அருகே ஏனங்குடி கிராமத்தில் சோழர்மன்னர்கள் பரம்பரையில் கட்டப்பட்ட 108 சிவத்தலங்களில் ஒன்றான ஸ்ரீமகிழம்பாள் சமேத திருவளந்துறையார் திருக்கோவில் கருங்கல்லால் கட் டப்பட்டுள்ளது. இக்கோவிலில் சனிஸ்வரர், சூரியன் மற்றும் சந்திரன் நேர்க்கோட்டில் இ ருப்பது சிறப்பாக உள்ளது. கோவிலில் ஸ்ரீவராக பெருமாள்,நாரதர் உள்ளிட்ட மேலும் பல விக்ரகங்கள் உள்ளன. மூலவரான திருவளந்துறையார் சுயம்பாக அருள் பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் வழிபாடு செய்வதும், உச்சிகாலத்தில் பூஜைசெய்வதும், வராக பெ ரு மாள் தீர்த்தம், வர்க்க தோஷ நிவர்த்தி, புத்திரதோஷ நிவர்த்திக்கு சிறந்த பரிகாரஸ்தலமாக உள்ளது. மேலும் கால பைரவரை வணங்கி செவ்வரலி பூக் கொண்டு பூஜை செய்தால் செல்வம் பெருகும். இச்சிறப்பு மிக்க கோவில் தற்போது காடுகள் மண்டி சுவர்கள் இடிந்து சேதமடை ந்துள்ளது. கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் விழா குழு அமைத்து கோவில்கட்டுமானப் பணி களை துவக்கியுள்ளனர். கோவில் கட்டுமான பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் பக்தர்கள் விழாக் குழுவினர்களை 9443262582,979073542 மற்றும் 9442398606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.