உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக, சகஸ்ரநாம அர்ச்சனை நாளை துவங்குகிறது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ??ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடக்கின்ற சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனையாக நாளை (21ம் தேதி) துவங்குகிறது. 108 நாட்களுக்கு லட்சார்ச்சனை நடக்க உள்ளது.லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும், மாணவ மாணவிகளுக்கு, அதிக மதிப்பெண் பெறுதல், விரும்பிய மேற்படிப்புகளை படிப்பது, தீய சிந்தனைகள் ஒழிந்து நற்குணங்கள் ஏற்படுவது போன்றவை கைகூடும் என்பது ஐதீகம். சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, தமிழில் ஒவ்வொரு நாமாவளிக்கும் விளக்கத்துடன் கூடிய சகஸ்ரநாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா ஆகியவை வழங்கப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி ஆகியவற்றுடன், 750 ரூபாய் செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். சகஸ்ரநாம அர்ச்சனை ஏற்பாடுகளை, லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். கோவில் குருக்கள் கூறும்போது, லட்சுமி ஹயக்ரீவரை, புதன்கிழமைகளில் மாணவர்கள் வழிபட்டால், கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கும். நோயாளிகள் வழிப்பட்டால், நோய்கள் குணமடையும். மருத்துவர்கள், தங்களது துறையில் சிறப்புடன் திகழ்வர்.தட்சணாமூர்த்தி, சரஸ்வதி மற்றும் சனகாதி முனிவருக்கும் குருவாக ஹயக்ரீவர் திகழ்வதால், வியாழக்கிழமைகளில் வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை, தொடர்ந்து 9 வியாழக்கிழமை வழிபட திருமண தடை விலகும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஹயக்ரீவருடன் மகாலட்சுமி சேர்ந்து அருள்பாலிப்பதால், வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன்கள் தீரும், செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சனிக்கிழமைகளில் பூஜிப்பவர்களுக்கு பாவங்கள் நீங்கி, நன்மை ஏற்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !