வினை தீர்த்த விநாயகர் கோவிலில் நவசக்தி வேள்வி!
ADDED :4289 days ago
கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் சப்ஜெயில் ரோட்டில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில் உலக அமைதி வேண்டி நவசக்தி வேள்வி நடந்தது. வேள்வியை கோவில் குருக்கள் அறிவழகன் தலைமையிலான குழுவினர் செய்தனர். கோவில் நிர்வாகி ரவி, வார்டு கவுன்சிலர் சங்கர் பங்கேற்றனர். துர்கை வழிபாட்டு குழுவைச் சேர்ந்த வளர்மதி, சுஜாதா, உஷா உட்பட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.