வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அபிஷேக பூஜை
ADDED :4289 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகபக்தர்கள் காவடிக்குழுவின் பழநி பாதயாத்திரை சார்பில், 38 ம் ஆண்டு திருவிழாவையொட்டி, இன்று (21ம்தேதி) காலை 7.30 மணிக்கு, நடுமலை ஆற்றிலிருந்து சக்திக்கும்பம் எடுத்துவரப்பட்டு, காலை 9.00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது. தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. நாளை (22ம் தேதி) காலை முருகனுக்கு பூஜை, நெய்வேத்தியம் நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 3.00 மணிக்கு வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து, பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மருதையன், பழனிச்சாமி உட்பட பலர் செய்து வருகின்றனர்.