உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!

உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்ட உற்சவத்தில், தேரின் முன்சக்கரம் உடைந்த சம்பவம் தொடர்பாக, கோவில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. கோவிலில், கடந்த, 12ம் தேதி முதல் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 18ம் தேதி, தேரோட்ட உற்சவம் நடந்தது. அப்போது, தேரின் முன்சக்கரம் உடைந்து, தேர் நடுவழியில் நின்றது. சம்பவ இடத்தில் இருந்த கோவில் செயல் அலுவலர் வேலரசு, சத்தமில்லாமல் அங்கிருந்து அகன்று விட்டார். இதுகுறித்து, நேற்று முன்தினம், "தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, செயல் அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அற நிலையத் துறை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர். வேலரசுக்கு பதில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், செயல் அலுவலர் வஜ்ஜிரவேல், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேதமடைந்துள்ள தேரின் மர சக்கரங்களை அகற்றி, திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் இரும்பு சக்கரங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திட்ட மதிப்பிடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், புதிய சக்கரம் பொருத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !