மழை வேண்டி சுதர்சன யாகம்
ADDED :4289 days ago
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே உள்ள தாளியூரில் மழை வேண்டி சுதர்சன யாகம் நடந்தது. தாளியூரில் ஸ்ரீரங்கநாதர் சமேத பெட்டதம்மன், துளசியம்மாள் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டியும், உலகம் அனைத்து விதமான சுபிட்சமும் பெற வேண்டி மகா சுதர்சன யாகம் நடந்தது. யாகத்தையொட்டி ரங்கநாதருக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு வழிபாடு, தீபாராதனை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.