விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :4409 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் மெயின்ரோடு வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். பரம்பரை தர்மகர்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார்.