லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை துவக்கம்
ADDED :4289 days ago
புதுச்சேரி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், சகஸ்ரநாம அர்ச்சனை இன்று துவங்குகிறது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனையாக இன்று (21ம் தேதி) துவங்குகிறது. 108 நாட்களுக்கு லட்சார்ச்சனை நடக்க உள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, தமிழில் ஒவ்வொரு நாமாவளிக்கும் விளக்கத்துடன் கூடிய சகஸ்ரநாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா வழங்கப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி ஆகியவற்றுன், 750 ரூபாய் செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். சகஸ்ரநாம அர்ச்சனை ஏற்பாடுகளை, லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்டியினர் செய்துள்ளனர்.