அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :4289 days ago
ஈரோடு: கொடுமுடி அருகே ஊஞ்சலூர் அடுத்த நன்செய் கொளநல்லி, கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா, கடந்த, 11ம் தேதி நடந்தது. 16ம் தேதி, அம்மனுக்கு அபிஷேகமும், 17ம் தேதி மாவிளக்கு, அம்மன் வீதி உலாவும், 18ம் தேதி அபிஷேகமும் நடந்தது. கடந்த, 19ம் தேதி குதிரை வாகனத்தில், அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று, வானவேடிக்கை மற்றும் தெப்போற்சவமும், நாளை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.