இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜை
ADDED :197 days ago
கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் நேற்று காலை 10.30 மணிக்கு மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்று விளக்கேற்றி வழிப்பட்டனர். பூஜைகளை தேவா பட்டர் செய்து வைத்தார். விழாவிற் கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.