உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது!

பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது!

பழநி: பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழா, முகூர்த்தகால் நாட்டுதலுடன், நேற்று துவங்கியது. பழநி தேவஸ்தான உபகோயிலான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரவு 8 மணிக்கு மேல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, திருக்கம்பம் சாட்டுதல், பிப்., 25 ல் நடக்கிறது. கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிசட்டிகள் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த உள்ளனர். மார்ச்11ல் திருக்கல்யாணமும், மார்ச் 12 ல் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழா துவங்கியதைடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். முகூர்த்தகால் நாட்டுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !