ராமேஸ்வரம் மகாசிவராத்திரி விழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :4260 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா பிப். 20ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து கோயிலில் 12 நாள்கள் திருவிழாவில் தினசரி சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும். மாசி மகா சிவராத்திரி விழாவின் 5ம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ராமாநாத சுவாமி,பிரியாவிடை அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.