உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

நத்தம்: நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுசாகுல்ஹமீது ஆசீக்கின் தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது.விழாவிற்காக நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித சந்தனம், குடத்தில் நிரப்பப்பட்டு சலங்கை ஒலிக்க தர்காவிலிருந்து ஊர்வலமாக சுமந்து சந்தனக்குடத்தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. அங்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.நிகழ்ச்சியில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, டாக்டர் முகமதுயூசுப், ஜவ்வாதுமீரான், மாவட்ட காங் கிரஸ் துணைத் தலைவர் சேக்ஒலி, தெற்குத்தெரு பள்ளி வாசல் ஜமாத் தலைவர் சுல்தான், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் காசிநாதன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் டாக்டர் நசீர் அகமது சையது, முகமது ஜூல்பிகா, இன்ஜினியர்கள் முகமதுசாலியா,முகமது மீரான், ஜல்வத்தி, காதர்மீரான் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !