இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு
ADDED :4258 days ago
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், உண்டியல்கள் திறந்து, காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. இதில், கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் காணிக்கையாக, 27லட்சத்து 90ஆயிரத்தி 698 ரூபாய், 105 கிராம்தங்கம் , 220 கிராம் வெள்ளி கிடைத்தது. பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, கோயில் செயல்அலுவலர் தனபாலன், மடப்புரம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, பிரிவு அலுவலர் முருகன் முன்னிலையில், கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. கோயில் வளாகத்தில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.