திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம்; சுவாமி உலா
ADDED :47 minutes ago
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்தசஷ்டி இரண்டாம் நாள் உத்சவம் இன்று நடந்தது.
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு கந்தபெருமான் கிளி வாகனத்தில் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் உத்சவம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு உத்சவத்தில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.