உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினம் மூன்று வேளை சண்முகார்ச்சனை

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினம் மூன்று வேளை சண்முகார்ச்சனை

திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் சண்முகார்ச்சனை முடிந்து தீபாராதனை நடந்தது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினம் காலை 8:30 மணி, காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. இன்று ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினம் காலை 8:30 மணி, காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. கோயிலில் சஷ்டி திருவிழாவில் அக். 22முதல் அக். 27வரை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பதினாறு வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. பின்பு சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை படைக்கப்படுகிறது. வழக்கமாக உபயதாரர்கள் மூலம் தினம் இரண்டு வேளை சண்முகார்ச்சனை நடைபெறும். இந்த ஆண்டு நேற்று முதல் 5 நாட்களுக்கு உபயதாரர்கள் மூலம் கூடுதலாக ஒரு வேளை சிறப்பு சண்முகார்ச்சனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !