உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பலத்த காற்றால் மலைக்கோயிலில் ரோப்கார் இயங்குவதில் சிக்கல்!

பழநியில் பலத்த காற்றால் மலைக்கோயிலில் ரோப்கார் இயங்குவதில் சிக்கல்!

பழநி: பழநியில் பலத்த காற்று வீசியதால், மலைக்கோயில் ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் செல்லலாம், இதனால் குழந்தைகள், முதியவர்கள் உட்பட அதிக பக்தர்கள் ரோப்காரில் செல்வதையே விரும்புகின்றனர். பழநியில் பலத்த காற்று வீசியதால், பகல் 12.20 மணிக்கு ரோப்கார் நிறுத்தப்பட்டது. காத்திருந்த பக்தர்கள் வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றனர். மீண்டும், மாலை 3 மணிக்கு ரோப்கார் இயக்கப்பட்டது. இருப்பினும் காற்று அதிகமாக வீசிய நேரங்களில், அவ்வப்போது நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

ரோப்கார் நிறுத்தம்: மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (பிப்.26ல்)ரோப்கார் நிறுத்தப்பட உள்ளது. மலைக்கோயில் மேல்தளம், கீழ்தளத்தில், பல்சக்கரங்கள், கம்பிவடக்கயிறு, உருளையில், ஆயில், கிரீஸ்கள் இட்டு, குறிப்பிட்ட எடையளவு கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !