உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோவில் யானைக்கு தங்க முலாம் பூசிய முகப்பட்டம்!

ராமேஸ்வரம் கோவில் யானைக்கு தங்க முலாம் பூசிய முகப்பட்டம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில் யானை, ராமலட்சுமிக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தங்க முலாம் பூசிய முகப்பட்டத்தை, ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்ரமணிய ராஜா, கோவில் இணை கமிஷனரிடம் வழங்கினார்.பின், நேற்று, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, யானைக்கு முகப்பட்டம், செம்பு சங்கிலி அணிவிக்கப்பட்டது.

உண்டியல் வசூல் ரூ.48.18 லட்சம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 30 நாள்களுக்கு பிறகு உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் கணக்கிட்டனர். இதில், 48 லட்சத்து 18 ஆயிரத்து 284 ரூபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் 102 பணத்தாள்கள், 36 கிராம் தங்கம், 4 கிலோ 170 கிராம் வெள்ளி இருந்தன. இதை எண்ணும் பணியை, இருக்கன்குடி கோயில்உதவி கமிஷனர் தனபாலன், ராமேஸ்வரம் கோயில் கண்காணிப்பாளர் ராஜாங்கம் உட்பட பேஷ்கார்கள் மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !