உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பூர், தாம்பரத்தில் திருப்பதி தரிசன டிக்கெட்!

பெரம்பூர், தாம்பரத்தில் திருப்பதி தரிசன டிக்கெட்!

சென்னை: திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பெரம்பூர் மற்றும் தாம்பரத்தில், இணையதளம் மூலம், தரிசன டிக்கெட் முன்பதிவு மையங்கள், விரைவில் துவக்கப்பட உள்ளன. இதுகுறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர், கண்ணையா விடுத்துள்ள அறிக்கை: திருப்பதியில், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, இணையதளம் மூலம், தரிசன டிக்கெட் முன்பதிவு மையங்கள், பெரம்பூர் மற்றும் தாம்பரத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளன. தேவஸ்தானத்தில் பணிபுரியும், 12 ஆயிரம் ஊழியர்களுக்கு, திருப்பதியில், வீட்டுமனைகள் வழங்கப்பட உள்ளன என, தேவஸ்தான உயர்மட்ட குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், திருப்பதியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் தயாரிக்க பயன்படுத்தப்படும், அரிசியின் தரத்தை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !