உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் வைரத்தேர் புதுப்பிப்பு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் வைரத்தேர் புதுப்பிப்பு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் சிறிய வைரத் தேர் புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது.சன்னதி தெரு 16 கால் மண்டபம் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள இத்தேர் பழமை வாய்ந்தது. தை மாதம் தெப்பத்திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் ஆண்டுக்கு இருமுறை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அந்த தேரில் எழுந்தருளுவர். பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், பழுதடைந்தது. உபயதாரர் மூலம் தேரை புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது.கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் கூறுகையில், ரூ.3.20 லட்சம் ரூபாயில் தேர் புதுப்பிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களில் பணி முடியும். பங்குனித் திருவிழா முடிந்தவுடன், கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேர் புதுப்பிக்கும் பணி துவங்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !