உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்ச் 17ல் அமர்நாத் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்!

மார்ச் 17ல் அமர்நாத் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்!

ஜம்மு: வரும் 17-ம் தேதி முதல் அமர்நாத் கோவில் செல்வதற்கான ஹெலிகாப்டர் சேவை துவங்க உள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி நவீன் கே சவுத்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்த ஹெலிகாப்டர் சேவை பவன் ஹன்ஸ்லிமிடெட் நிறுவனம் மற்றும் குளோபல் வெக்ட்ரா ஹெலி கார்ப் நிறுவனம் மூலம் சேவை வழங்கப்படும் . இந்த சேவை நீல்க்ராத்-பஞ்ச்தார்ணி -நீலக்ராத்வழியாகவும்பஹல்காம்-பஞ்ச்தாரிணி-பஹல்காம் செக்டார் வழியாகவும் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமும் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக நீலக்ராத் வழியாக ரூ.ஆயிரத்து 950 எனவும், பஞ்ச்தார்ணி வழியாக செல்வோருக்கு ரூ.4 ஆயிரத்து 190 ஆகவும் நிர்ணயிக்ககப்பட்டுள்ளது. சேவைகட்டணத்துடன் அனைவரும் கட்டாயமாக உடல் நலம் குறித் சான்றுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனஅவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !