உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் பிரதோஷம்,சிவராத்திரி: சிவபக்தர்கள் மகிழ்ச்சி!

ஒரே நாளில் பிரதோஷம்,சிவராத்திரி: சிவபக்தர்கள் மகிழ்ச்சி!

திருவெண்ணெய்நல்லூர் : மகாசிவராத்திரி தினத்தன்று பிரதோஷமும் வருவதால் சிவ பக்தர்கள் மகிழ்ச் சியடைந்துள்ளனர். மகா விஷ்ணுவிற்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி வந்த போது மாசி மாதம் தேய் பிறை சதுர்த்தசி திதியன்று சிவபெருமான், இருவருக்கும் காட்சியளித்த தினமே மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றை இறைவனிடம் சமர்ப்பிப்பதை குறிக்கும் வகையில் சிவாலயங்களில் நான்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் விடிய, விடிய பல்வேறு கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வழங்குவர். இதேப்போல் பாற்கடலில் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் திரயோதசி நாளில் உண்ட போது அம்பிகை அதை தடுத்து நிறுத்தினார். இத்தினமே பிரதோஷ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் பிரதோஷமும், மகா சிவராத்திரியும் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !