பொள்ளாச்சி, உடுமலை கோவில்களில் சிவராத்திரி விழா!
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நாளை நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நாளை (27ம்தேதி) மாலை 6:30 மணிக்கு முதல் கால அபிேஷகமும், இரவு 8:30 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், 12:30 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகமும், அதிகாலை 3:30 மணிக்கு நான்காம் கால அபிேஷகமும் நடக்கிறது. ஆவலப்பட்டி ஜமீன் கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில், சிங்காநல்லுார் ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ரமணமுதலிபுதுார் மகுடீஸ்வரி உடன்அமர் மண்கண்டேஸ்வரர் திருமடலாயம், வடுகபாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை 8:00 மணிக்கு புண்ணியதீர்த்தம் எடுக்க செல்லுதல்; மாலை 5:00மணிக்கு புண்ணிய தீர்த்தம் கோவிலுக்கு அழைத்தல், இரவு 7:00 மணிக்கு புண்ணிய தீர்த்தம் அம்மனுக்கு செலுத்துதல், இரவு 8:00 மணிக்கு சிவபெருமானுக்கு மகா அபிேஷகம், இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு திரு ஆபரணம் எடுத்து வருதல், இரவு 11:00 மணிக்கு மயான பூஜை, சக்தி கும்பம் கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 28ம் தேதி காலை 8:00 மணிக்கு பள்ளய பூஜை, காலை 10:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, பூவோடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 1ம் தேதி காலை 10:30மணிக்கு மஞ்சள் நீராட்டு, மகா அபிேஷகம், தீபாராதனையும், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நாளை மகா சிவராத்திரி விழா, நடக்கிறது. உடுமலை திருமூர்த்திமலை யில், மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்த அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா இன்று துவங்குகிறது. இதைமுன்னிட்டு, இன்றிரவு 8.00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்தில், திருச்சப்பர பூஜை நடக்கிறது. நாளை மாலை 4.00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்திலிருந்து திருச்சப்பரம் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இரவு 8.00 மணிக்கு கோவிலில், முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனை நடக்கின்றன. தொடர்ந்து, நள்ளிரவு 2.00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனையும் நடக்கிறது. மகா சிவராத்திரி விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் நாளை இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உடுமலை, பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மறையூர், கோவில்கடவில் உள்ள தென்காசிநாதன் கோவில், உடுமலை பூளவாடியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், உடுமலை கொங்கல் நகரத்தில் உள்ள கானியப்ப மசராயர் கோவில், உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவில், உடுமலை கொடிங்கியத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடக்கிறது. மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கடத்துார் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர், காரத்தொழுவு சிவன் கோவில், கொழுமம் வீரசோழிஸ்வரர், கொமரலிங்கம் விசாலாட்சி உடனமர் காசி விசுவநாதர் கோவில், கடத்துார் அங்காளம்மன் கோவில், கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்த தீவிர முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பூஜைக்கு பழங்கள், பூக்கள் வழங்குபவர்கள் நாளை (27ம் தேதி) மாலை கோவில்களில் வழங்கும்படி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.