உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, கோவிலில் கம்பம் நடப்பட்டது. இத்திருவிழா பொள்ளாச்சி மக்களால் 22 நாட்கள் கொண்டாடப்படும். அதற்கான சாட்டு கடந்த 18ஆம் தேதி நடந்தது. அடுத்ததாக, சம்பிரதாயப்படி நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கோவில் முன்பு கம்பம் போடப்பட்டது. பொள்ளாச்சி தெப்பக்குளத்தில் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் பூசி அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலுக்கு எடுத்து வரப்பட்ட கம்பம் கோவிலின் முன் நடப்பட்டது. நடப்பட்ட கம்பத்துக்கு, பெண் பக்தர்கள், தீர்த்தம் கொண்டு வந்து அபிேஷகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !