உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பத்துக்கு மஞ்சள் நீரூற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு

கம்பத்துக்கு மஞ்சள் நீரூற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு

திருப்பூர் : திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், கம்பம் போடும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த 18ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கணபதி பொங்கல் வைக்கப்பட்டது. அன்றிரவு 10.00 மணிக்கு, பார்க் ரோடு நொய்யல் ஆற்றங்கரையில், சக்தி அழைத்தல் மற்றும் கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. வாண வேடிக்கை, மேள, தாளத்துடன் 168 பால்குட ஊர்வலம் நடந்தது. நள்ளிரவு 12.30 மணிக்கு, கோவில் முன் கம்பம் நடப்பட்டது. தொடந்து, பூவோடு வைக்கப்பட்டது. கம்பத்துக்கு, பெண்கள், நேற்று, மஞ்சள் நீரூற்றியும், வேப்பிலை வைத்தும் வழிபட்டனர். ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று காலை 5.00 மணிக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து, கிடா வெட்டு, மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !