கருப்பண சுவாமி கோயிலில் சிவராத்திரி விழா கொடியேற்றம்!
ADDED :4284 days ago
பரமக்குடி: பரமக்குடி குருநாதர், வேலங்குடி கருப்பண சுவாமி கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி குருநாதர், அங்காளம்மன், கருப்பணன், ஆனந்தவள்ளி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.