அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!
ADDED :4284 days ago
கூத்தூரில் உள்ள 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால பூஜையும், காலை 10.55 மணிக்கு காமாட்சி அம்மன் சன்னதி, அணியாளத்தம்மன் சன்னதி விமான கும்பாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.