ராஜபாளையம் சொக்கர் கோயிலில் சிவராத்திரி வழிபாடு
ADDED :4282 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர்கோயிலில், சேக்கிழார் மன்ற உறுப்பினர்கள் சிவராத்திரியை முன்னிட்டு, சிவபுராண பாடல்களை பாடினர். பின், அரசு மருத்துவமனை சென்று, நோயாளிகளுக்காக வழிபாடு நடத்தி, விபூதி, குங்குமம், வேட்டி, சேலை வழங்கினர். ஏற்பாடுகளை, மன்ற தலைவர் செண்பகம், பொருளாளர் வெங்கடாசலம், நிர்வாகிகள் கோவிந்தன், கருப்பையா மோகன் செய்து இருந்தனர்.