உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்

திரவுபதி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்

ஊத்துக்கோட்டை : திரவுபதி அம்மன் கோவிலுக்கு, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில். நேற்று காலை இங்கு, மூன்றாம் ஆண்டு, பால்குடம் ஏந்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள ரெட்டித்தெருவில் துவங்கி, செட்டித்தெரு, பிராமணத் தெரு வழியாக கிராமத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் கொண்டு வந்த பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !