பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா
ADDED :4273 days ago
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியை தொடர்ந்து, சங்கமேஸ்வரர் கோவிலில், நான்கு கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரவு, ஏழு மணி, 11 மணி, ஒரு மணி, நான்கு மணி என சிறப்பு பூஜைகள் நடந்தது. சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள மூலவருக்கு, சுப்ரமணிய குருக்களும், வேதநாயகி அம்மனுக்கு சுவாமிநாத குருக்களும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், பூஜை செய்தனர்.பவானி, சின்னகோவில் என்று அழைக்கப்படும், காசி விஸ்வநாதர் கோவில், பசவர் சமூதாய கூடத்தில், சிவலிங்க பூஜை, அரிமா சங்கத்தில் ஈஷா யோகா மையத்தின் சார்பில் சொற்பொழிவு நடந்தது.