திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!
ADDED :4273 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்களை கொட்டி அம்மனை தரிசித்தனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா பிப்., 27 ல் துவங்கியது. நேற்று முன்தினம், பூத்தமலர் பூ அலங்கார விழா நடந்தது. நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. அம்மன் பூத்தேரில் எழுந்தருளினார். தேர், மேற்குரத வீதி, கலைக்கோட்டு விநாயகர்கோயில், பென்ஷனர் தெரு, கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாக சன்னதியை அடைந்தது. அம்மனை, பக்தர்கள் உதிரிப்பூக்களை கொட்டி தரிசித்தனர். அன்று முழுவதும் அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது.