ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம்!
ADDED :4270 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளத் தெருவில் உள்ள ஸ்ரீ சள்ளச்சேரி அங்காளபரமேஸ்வரி, பாவாடைராயன், உலகளந்த அய்யனார் ராசாத்தியம்மாள் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் மலைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும் 6ம் தேதி மாலை தீமிதி உற்சவம், 8ம் தேதி மாலை குடல் பிடுங்கி உற்சவம் நடக்கிறது.