உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜர் நாட்டியாஞ்சலி நிறைவு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

திருவாரூர் தியாகராஜர் நாட்டியாஞ்சலி நிறைவு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு துவங்கிய நாட்டியாஞ்சலி நிறைவு விழா நேற்றுமுன் தினம் இரவு முடிந்தது. திருவாரூர் தியாகராஜர்கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா வை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா மிகவும் சிறப்புடன் நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறுப்பகுதியில் இருந்து நாட்டியப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் அரங்கேற்றத்தை நடத்தி வருகின் றனர். தற்போது 17ம்தேதி விழாவை முன்னிட்டு கடந்த 26ம் துவங்கியது. செயல் அலுவலர் ஜெயக்குமார்வரவேற்றார். அரசு இயல் இசை நாடக மன்ற செய லர் சச்சு தலைமை தாங்கினார். புதுடெல்லி மத்திய அரசு பிரதிநிதி கீதா சந்தி ரன் முன்னிலை வகித்தார். திருவாரூர் முரா சன்ஸ் உரிமையாளர் நந்தகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். புதுடெல்லி மத்திய கலாச்சார அமைச்சகர உறுப்பினர் நந்தினிரமணி குத்து விளக்கேற்றி வைத்தார். பிப்ரவரி 26ம்தேதியில் இருந்து மார்ச் 1ம்தேதி வரை தமிழகத்தின் பல்வே றுப் பகுதியில் இருந்து நாட்டிய மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் அரங்கேற்றத்தை நிகழ்த்தினர். நேற்று முன் தினம் 2ம்தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் சென்ன சிபி சுதர்சன் பரத நாட்டியம், 6.55 மணிக்கு கோவை தாராரமேஷ் பள்ளியின் மாணவிகளின் நந்தனார் சரித்திரம்குறித்த நாட்டிய நாடகம் நடந்தது. சென்னை நிரித்யசுதா நாட்டியப்பள்ளி, சென்னை சிதம்பரம் இசை நாட்டியப்பள்ளி,சென்னை கிருஷ்ணா அஞ்சலி நாட்டிய அகாடமி, திருவாரூர் அரசு இசைப்பள்ளி, கோவை கிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி, காட்டூர் டிவைன்ஸ்டான்ஸ் அகாடமி மற்றும் கோவை ஈஷா சமஸ்க்கிருதி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில்  ஆயிரகணக்கானோர் பங்கேற்று நாட்டிய நிகழ்ச்சியை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !