உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் நிகும்பலா யாகம் பக்தர்கள் தரிசனம்!

அய்யாவாடியில் நிகும்பலா யாகம் பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீமகாபிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலாயாகம் சிறப்பானது. யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டால் சத்ரு உபாதை நீங்கும். மாசி மாத அம்மாவாசையான நேற்று முன்தினம் காலை ஸ்ரீ மகாபிரத்தியங்கிராதேவிக் கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது.9மணிக்கு கோவில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தினார். யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவியை தரிசித்தனர். நிகும்பலா யாகத்தையொட்டி கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !