முத்துப்பேட்டை தர்காவில் கந்தூரிவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தர்காவில் 712ம் ஆண்டு கந் தூரிவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் நடந்த கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அமைச்சர் வாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 14 நாட்கள் நடக்கும் கந்தூரி விழாவில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் ஆயி ரக்கணக்கானோர் ஆண்டுதோறும் பங்கேற்று வருகின்றனர். வரும் 12ம்தேதி கந்தூரி விழா நடக்கிறது. தற்போது 712ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் 2 ம்தேதி மாலை கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. தர்கா முதன்மை அறங்காவலர் பாகக்அலி சாஹிப் தலைமையில் புனித தாவூதியா மஜ்லி ஸில் ஷேக் தாவுது, துஆ., ஓதிய பின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வாசன்,இந்தி காங்., கமிட்டி உறுப்பினர் ஜி.ஆர் மூப்பனார், மாவட்டத் தலைவர் தினகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத நல்லணிக்கம்குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.