கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4261 days ago
ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை, கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அஸ்வரேவந்தாபுரம் கிராமத்தில் உள்ள, கமல விநாயகர் கோவில் சீரமைப்பு பணி, கடந்த ஆண்டு துவங்கியது. கிராம மக்கள் பங்களிப்புடன் நடந்து வந்த பணிகள், சமீபத்தில் நிறைவடைந்தன. இதையடுத்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து, புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுரம் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலை 6:00 மணிக்கு கமல விநாயகர், வாண வேடிக்கையுடன், வீதியுலா எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியின் அருள் பெற்றனர்.