கருமாரியம்மன் கோவிலில் அன்னதான மண்டபத்தை திறக்க கோரிக்கை!
ADDED :4260 days ago
திருவேற்காடு: சென்னை, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், கட்டி முடிக்கப்பட்ட அன்னதான மண்டபம், பணியாளர்கள் குடியிருப்புகளை உடனடியாக திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவேற்காடு, கருமாரியம்மன் கோவிலில், 4,800 சதுரஅடியில், 98 லட்சம் ரூபாய் செலவில், 200க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு உண்ணும் வகையில், அன்னதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அதே போல், 99 லட்சம் ரூபாய் செலவில், கோவில் பணியாளர்களுக்கான குடியிருப்பு கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால், இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.விரைவில், அன்னதான மண்டபம், கோவில் ஊழியர்கள் குடியிருப்புகளை திறக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.